சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரால் எழுந்த சர்ச்சை… “வாரிசு”என்ற வார்த்தை நியாயமற்றது… பிரபல பாலிவுட் நடிகர் கருத்து…!

கிரிக்கெட் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அர்ஜுன் டெண்டுல்கரை கீழே தள்ளி விடாதீர்கள் என பிரபல பாலிவுட் நடிகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் சமீப காலத்திற்கு முன் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நடை பெற்றது.அதில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம் பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு ஆரம்ப விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் பின் அவருடைய ஏலம் தொடங்கிய போது எந்த அணிகளும் அவரை எடுக்கவில்லை.

அதனால் ஆரம்ப விலையின் அடிப்படையிலேயே அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் பேட்டிங் ஆலோசகராக இருக்கிறார். அதனால் அந்த அணி சச்சினின் வாரிசு என்ற அடிப்படையில் அர்ஜுனை ஏலம் எடுத்து இருக்கலாம் என்று விமர்சனம் எழுந்து வந்தது.

இந்த சர்ச்சை குறித்து பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நானும், அர்ஜுன் டெண்டுல்கரும் ஒரே ஜிம்முக்கு செல்கிறோம். அங்கு அவர் தனது உடலை பராமரிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதையும் நான் பார்த்துள்ளேன்.

இந்நிலையில் அர்ஜூனை பார்த்து சொல்லப்படும் “வாரிசு” என்ற வார்த்தை நியாயமற்றதும், கொடுமையானதுமாகும். இப்படிக் கூறி அவரின் உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள்.மேலும் அவர் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *