“பிசிசிஐ வெளியிட்ட கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியல்”… ரிஷப் பண்ட் தக்கவைப்பு…. வேகப்பந்துவீச்சாளர் நீக்கம்…. முழு லிஸ்ட் இதோ…!!!

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2022-23 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தம் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை தேதியிடப்பட்டுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியல் வீரர்களின் திறமைக்கு ஏற்ப 4 வகைகளாக பிரிக்கப்படும். அதன்படி ஏ+ பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரூ. 7 கோடியும், ஏ பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக வழங்கப்படும். இந்நிலையில் ஒப்பந்த பட்டியலின்படி ஏ+ பிரிவில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு ஏ பிரிவில் ஹர்திக் பாண்டியா, அஸ்வின், முகமது ஷமி, விபத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், அக்சர் படேல் ஆகிய 5 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து பி பிரிவில் செத்தேஷ்வர் புஜாரா, கே.எல் ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சி‌ பிரிவில் அர்ஷிப் சிம், கே.எஸ் பரத், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, இஷன் கிஷன், ஷிகர் தாக்கூர், விக்ரம் தவன் மற்றும் உமேஷ் யாதவ் போன்ற 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். மேலும் இந்த ஒப்பந்த பட்டியலில் இருந்து வேகபந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.