”கொட்டித் தீர்க்கும் மழை” நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

 

கடந்த 5-ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் கேரளா போன்ற இடங்களில்  பலத்த மழை பெய்து வருவதால் பவானி அணைக்கு வந்து சேரும்  ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 10 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது.

Related image

இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.24 அடியாகவும், நீர் இருப்பு 10.8 TMC-யாகவும், அணையின் நீர்வரத்து 1,01638 கன அடியாக உயர்ந்துள்ளது.  மேலும் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.