இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து சரிவு…. முதலீட்டாளர்களுக்கு 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு.!!

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 372 புள்ளிகளும், நிப்டி 131 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு சதவீத சரிவாகும். அமெரிக்கா – சீனா இடையே நிலவும்  வர்த்தக நெருக்கடிகள், தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, எதிர்பார்த்த அளவிற்கு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இல்லாதது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

Related image

இதன் காரணமாக 2011 – ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் தொடர்ந்து 9 நாட்கள் சந்தை சரிவை கண்டுள்ளது. நிப்டி இன்டெக்சில் இடம்பெற்றுள்ள 50 நிறுவனங்களில் சன்பார்மா, ஐசர் மோட்டார்ஸ், ஜீ எண்டர்டெயின்மன்ட் போன்ற 40 நிறுவனங்களும்  சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59 காசுகள் குறைந்து 70 ரூபாய் 52 காசுகள் என்ற 2 மாதங்களுக்கு முன் இருந்த நிலையை எட்டியுள்ளது.