கண்டெய்னர் லாரிகள் மோதல்…. ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சி பிரிவு பாதை அருகே நேற்று இரவு 11 மணிக்கு ஒரு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரியும் எதிரே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆந்திர மாநில லாரியில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து படுகாயமடைந்த 2 டிரைவர்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply