முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது…!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் ஆனது நடைபெற்று வருகிறது .

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகின்றது .இந்த கூட்டத்தில்  திமுகவின் பொருளாளர் துரைமுருகன் , துணை பொதுச் செயலாளர் பெரியசாமி , அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் K.N நேரு உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருக்கிறார்கள் . இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின்  தேர்தல் அறிக்கையை இறுதி செய்து வெளியிடுவது தொடர்பாகவும் , கூட்டணிக் கட்சிகள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் பட்டியலை வெளியிடுவது தொடர்பாகவும்  விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகின்றது .

மேலும் பாராளுமன்ற தேர்தளுக்கு திமுக சார்பில் பொருளாளர்  துரைமுருகன் கூட்டணி பேச்சுவார்த்தை  குழுவாகவும் ,  முதன்மைச் செயலாளர் டி ஆர் பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கான குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட  தொகுதிகள் குறித்தும் , தேர்தல் அறிக்கையை இறுதி செய்து விவாதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இளைஞர்களை கவரும் வகையிலும் ,  தமிழகம் சார்ந்த உரிமை சார்ந்த பிரச்சினைகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.