மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் மீன்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ராஜகோபாலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *