மக்களே உஷார்…! ரூ. 1 1/2 கோடி மோசடி செய்த கட்டிட காண்டிராக்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி பகுதியில் கதிர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலவரப்பட்டியில் புதிதாக வீடு கட்டுவதற்காக முடிவு செய்து கட்டிட காண்ட்ராக்டரான சுரேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கான ஒப்பந்தம் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டது. பின்னர் கதிர்ராஜ் 1 கோடியே 61 லட்சத்து 54 ஆயிரத்து 347 ரூபாய் பணத்தை சுரேந்தர் மற்றும் அவரது மனைவி தீபா ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை வாங்கிக் கொண்ட சுரேந்தர் வீடு கட்டி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து கதிர்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுரேந்திரனை கைது செய்து சேலம் இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருக்கும் தீபாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply