தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…. லண்டனில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசி உள்ளார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய எம்.பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இங்கிலாந்து நாட்டில் லண்டன் மாநகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெளிநாட்டு பிரிவினர் அங்கிருக்கும் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது போராட்டக்காரர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.