பொது வாழ்க்கையில் அருண் ஜெட்லி செய்த பங்களிப்புகள் என்றும் நினைவில் இருக்கும் என்று சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. அதை தொடர்ந்து நேற்று இரவில் இருந்தே அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், முன்னாள் நிதியமைச்சர் ஸ்ரீ அருண் ஜெட்லி ஜியின் மறைவு குறித்து கேள்விப்பட்டது வருத்தமளிக்கிறது. திரு ஜெட்லி ஒரு பொது நபர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக நீண்ட இன்னிங்ஸைக் கொண்டிருந்தார் என்றும் பொது வாழ்க்கையில் அவர் செய்த பங்களிப்புகள் என்றும் நினைவில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Congress President Smt. Sonia Gandhi shares a condolence message for Shri Arun Jaitley. pic.twitter.com/19sEA2900u
— Congress (@INCIndia) August 24, 2019