“விண்வெளி ஆராய்ச்சிக்கு காங்கிரஸ் அங்கிகாரம் அளிக்கவில்லை “முன்னாள் இஸ்ரோ தலைவர் பகிரங்க குற்றசாட்டு ..!!

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விண்வெளி ஆராய்ச்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பாஜக முன்னாள் இஸ்ரோ தலைவரும் , பாஜக உறுப்பினருமான மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார் .

வருகின்ற ஜூலை 15ம் தேதி சந்திராயன்-2 விண்கலமானது விண் வெளியில் செலுத்தப்பட இருக்கிறது. இதுகுறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மற்றும் பாஜகவின் உறுப்பினருமான மாதவன் நாயர் கூறியதாவது,

Image result for madhavan nayar

ஜூலை 15ம் தேதி இஸ்ரோ சார்பில்  விண்வெளியில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 விண்கலம் ஆனது சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.. மேலும் இத் திட்டமானது மிகவும் தாமதமாக செயல்படுத்தப்படுவது மிகுந்த  வருத்தத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார் .

மேலும்  இத்திட்டம் 2012ஆம் ஆண்டே செயல்பட வேண்டியது என்றும், ஆனால் இத்திட்டத்திற்கு அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி  அரசியல் தலைவர்கள் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஆகையால்தான் இந்தியா வளர்ச்சி அடைய இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக காங்கிரஸ்  செயல்பட்டு வந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *