காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா?? மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி

புல்வாமா தாக்குதல் நடத்திய  தீவிரவாதிகளோடு ராகுல் காந்திக்கு தொடர்பு உள்ளதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்

சில வாரங்களுக்கு முன்பு இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீது பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாத படைகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து பல்வேறு பதட்டங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பினர் பொறுப்பு ஏற்ற நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இந்திய விமானப் படை வீரர்கள் அந்த அமைப்பின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர் இவ்வாறு தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்திய அரசியல் கட்சிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் சம்பந்தம் உள்ளதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றனர்

இந்த புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சிலர் அறிவுடன் பேசுவதாக புகழாரம் சூட்டியுள்ளார் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியாவில் சில அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர் ஆனால் காங்கிரஸ் அவ்வாறு செய்யாமல் அறிவுடன் பேசுகிறார்கள் என்று அவர் கூறியிருந்தார் இந்த பேச்சுக்கு பாஜக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் சம்பந்தம் உள்ளதா என்றும் இந்த வீடியோ குறித்து ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்…