காவல் துறையை துறையை தவறாக பயன்படுத்தும் மாநில அரசு…!!!

பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  

பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள்  வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம்  வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது

இது குறித்து தர்சன் கூறுகையில் ”வாக்குறுதி மட்டும் கொடுக்கிறீர்கள் அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லையே” என்று கேட்டுள்ளார். இதை தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் தர்சனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்விற்கு மாநில அரசு காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.