கர்நாடகாவில் “மக்களவை முடிவை புரட்டி போட்ட உள்ளாட்சி” காங்கிரஸ் 509 , பிஜேபி 366 …..!!

கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் படு தோல்வி அடைந்த காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான மதசார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.பாஜக 25 இடங்களையும் அதன் ஆதரவு சுயேச்சை ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக பாஜக கோட்டையாக மாறிவிட்டது என்று வர்ணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மே 29-ஆம் அங்குள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 1221 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி 509 இடங்களிலும், பாஜக 366 வார்டுகளிலும் வென்றுள்ளது. அதேபோல் மதசார்பற்ற ஜனதா தளம் 174 வார்டுகளிலும் , சுயேட்சைகள்  170 வார்டுகளிலும் , பி எஸ் பி 3 இடங்களிலும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.