உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பி.வி சிந்து மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று டெல்லி முதல்வர் பாராட்டியுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில், “உலக சாம்பின் பி.வி சிந்துவுக்கு எனது வாழ்த்துக்கள். BWF உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவர் மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். உண்மையான சாம்பியனுக்கு சல்யூட்” என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to world champion @Pvsindhu1
Winning the Gold at BWF world championship she has made India proud yet again
Salute to the real champion
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 25, 2019