“பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும்” பாரதி மகளுக்கு உ.பி முதல்வர் வாழ்த்து..!!

 பி.வி சிந்துவின் வெற்றி உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்க உதவும் என்று புகழ்ந்து உ.பி முதல்வர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் 

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின்  இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Image result for pv sindhu

இதையடுத்து தங்கம் வென்ற வீராங்கனை பி.வி சிந்து_க்கு பிரதமர் மோடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  உட்பட பல்வேறு தரப்பினர்களும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவை பெருமைப்படுத்தியதற்காக செல்வி. பிவி சிந்துவுக்கு நன்றி. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2019-இல் தங்கம் வென்ற மா பாரதியின் மகளுக்கு வாழ்த்துக்கள். பி.வி சிந்துவின் வெற்றியும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் தலைமுறைகளை பெரியதாக சிந்திக்கவும் உலக அரங்கில் ஒரு அடையாளத்தை உருவாக்கவும் உதவும்.