“கடின உழைப்பும், ஆர்வமும் வெற்றியை தரும்” பிவி சிந்துவுக்கு பி.டி உஷா வாழ்த்துக்கள்..!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு முன்னாள் தடகள வீராங்கனை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தரப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image

இந்நிலையில் வெற்றி பெற்ற பி.வி சிந்துவுக்கு முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.அதில், விளையாட்டில் கடின உழைப்பு இருக்கும் போது விளையாட்டிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் எப்போதும் நல்ல பலனை தரும்.  சிந்துவின் வெற்றி வரக்கூடிய  தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்! தங்கம் வென்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.