சிறை கைதிக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்…!!

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என  1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை  சிறைத்துறை நிர்வாகம்  விதித்தது. இதன் காரணமாக  கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Image result for மத்திய சிறை கைதிகள் போராட்டம்

இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால்  சிறைக்காவலர்கள் துன்புறுத்த கூடாது என்ற கோரிக்கையை  எழுத்து பூர்வமாக அளித்தால்  போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய சிறை பகுதி  சாலையில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுளளது. மேலும் பாதுகாப்புக்கு 200க்கும்  மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.