பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…!!!

வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம்  செய்ப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு  பறிமுதல் செய்ப்பட்ட  மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர்  கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம்  தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இச்சம்பவம் தொடர்பாக டிஎஸ்பி அஜய் தங்கம்  விசாரணைமேற்கொண்டு வருகிறார் .