தனித்துவமான திறனைக் கொண்ட அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தம் – குடியரசு தலைவர் இரங்கல்..!!

அருண் ஜெட்லி மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு உடல்நிலை மோசமானதால்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு  உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

Image

கடந்த செவாய்க்கிழமை, எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்  எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை. அதை தொடர்ந்து நேற்று இரவில் இருந்தே அருண் ஜெட்லியின் உடல்நிலை மோசமாக இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Image result for ramnath kovind arun jaitley

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,  ஒரு நீண்ட நோயை துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் போராடிய பின்னர் ஸ்ரீ அருண் ஜெட்லி காலமானதால் மிகுந்த வருத்தம். ஒரு சிறந்த வழக்கறிஞர், ஒரு அனுபவமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு புகழ்பெற்ற அமைச்சர், அவர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

ஸ்ரீ அருண் ஜெட்லி சமமான, ஆர்வம் மற்றும் படித்த புரிதலுடன் மிகவும் கடுமையான பொறுப்பை நிறைவேற்றும் தனித்துவமான திறனைக் கொண்டிருந்தார். அவர் கடந்து செல்வது நமது பொது வாழ்க்கையிலும் நமது அறிவுசார் சுற்றுச்சூழல் அமைப்பிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.