முடிந்தது “மாநாடு”…. படக்குழுவிற்கு நன்றி…. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு….!!

“மாநாடு” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது என்று இயக்குனர் வெங்கட்பிரபு அவரது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநாடு படக்குழுவினருக்கு நன்றி என்றும் கூறியுள்ளார். தமிழில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.