பாராட்டு மழையில் நனைந்து போன தல அஜித்…!!!!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார்.

 

அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Image result for அஜித்,நேர்கொண்ட பார்வை

 

அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய நடிப்பை பாராட்டினர். பாராட்டு மழையில் நனைந்து போன அஜித் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Image result for அஜித்

 

அதற்க்கு அஜித் இந்த பாராட்டெல்லாம் இயக்குனர் வினோத் அவர்களுக்கு போய் சேர வேண்டும். அவர் டைரக்‌ஷனில் என்னால் சவுகரியமாக நடிக்க முடிகிறது என்று அஜித் கூறியுள்ளார். கோர்ட்டில் அஜித் பேசிய நீளமான வசனத்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்தப்படம் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.