“முழுமையாக காலியாகும் காங்கிரஸ்” தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி  வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக குறைந்தது.

இந்நிலையில் தீடிர் திருப்பமாக அங்குள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த 12 MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர  சமிதி கட்சியில் இணைய இருப்பதாக தகவல் அம்மாநிலம் முழுவதும் பரவி வருகின்றது. இதை உறுதி செய்யும் வகையில்  அக்கட்சியின் 12 சட்டமன்ற உறுப்பினர்கள்  தெலுங்கானா சபாநாயகர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியை சந்தித்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியை  தெலுங்கானா ராஷ்டிர சமதியில் இணைத்து விட்டதாக அங்கீகாரம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகின்றது.