‘புகார் வந்தால் நடவடிக்கை எடுங்கள்’ உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… சிக்கலில் சூரரைப்போற்று..!!

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் பாடலுக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு, மாணவர்களின் தற்கொலை பற்றிய கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் சூர்யாவிற்கு மிகுந்த ஆதரவு பெருகி வருகிறது. இது தொடர்பாக கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சுதாகரன் கோங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் பாடல் ஒன்று இப்போது சிக்கல் எழுந்துள்ளது.

படத்தில் இடம்பெற்றுள்ள ‘மண்ட மேல’ என்ற பாடலில் சாதிப் பிரச்சினையை தூண்டும் விதமாக வரிகள் உள்ளதாக கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதை விசாரித்த நீதிபதி இளந்திரையன் பாடலுக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த படமானது பட்ஜெட் விமான பயணதை  சாத்தியமாக்கிய ஏர் டெக்கான் உரிமையாளர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *