கணவன் வெளியூரில்…. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர்… கமிஷனரிடம் மனு கொடுத்த இளம்பெண்..!!

இளம்பெண் ஒருவர் தான் தனியாக வசித்து வருவதால் பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் தொல்லை கொடுப்பதாக  கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

சென்னையை அடுத்துள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்தஇளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, கோவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் பெங்களூருவில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசித்து வரும் பரத் என்னும் வாலிபர் தொடக்கத்தில் என்னிடம் நன்றாக பழகினார். பின்னர் எனது கணவர் இல்லாததை பயன்படுத்தி அடிக்கடி என்னிடம் தவறாக நடக்க முற்படுகிறான்.

Image result for Sexual

இதற்கு நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும் எனக்கு அவர் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வருகிறார். இதுபற்றி பரத்தின் பெற்றோரிடம் நான் கூறினேன். ஆனால் அவர்கள் அவனை கண்டிக்காமல் என் மீது ஆத்திரமடைந்து தாக்கினார்கள். அது குறித்து நான் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

Image result for rape

எனக்கு அவமானக இருந்ததால் நான் காவல் நிலைய வாசலில்  தீக்குளிக்க முயன்றேன். ஆனாலும் காவல்துறையினர் அவர் மீது எந்த வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை சமாதானப்படுத்தவே  முயன்றனர்.  இது தொடர்பாக இன்று நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.