தேசிய அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவர்…. குவியும் பாராட்டுகள்….!!

விருதுநகர் மாவட்டத்தில் செந்தில் குமார நாடார் கல்லூரியில் அபினேஷ் குமார் என்பவர் 2- ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த அபினேஷ் குமாரை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டியுள்ளனர். இதேபோல் விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மேனகா போட்டியில் கலந்து கொண்டு 7- ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.