“பள்ளி மாணவர்களுக்கான கலைப் போட்டிகள்” வெற்றி பெற்றவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்….!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கலை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் விழாவினை கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞான சந்திரன் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். இதில் கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், குழு பாடல், ரங்கோலி, ஓவியம் வரைதல், மண்பாண்டத்தில் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் பிரிவில் அதிக போட்டிகளில் ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் இரண்டாவது பிரிவில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்கர்ட் கல்வி குழும இயக்குனரான ஜான் கென்னடி தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கல்வி இயக்குனர், நிர்வாக மேலாளர், பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.