பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு கருணை பணி நியமன ஆணை…!!

அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி  வழங்கினார். அதில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார்.

Image result for மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் ராஜி,போலீஸ் ஏட்டு அன்பழகனின் மனைவி புஷ்பலதா,போலீஸ் ஏட்டு சிவசண்முகத்தின் மகன் அருண்காந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலுசாமியின் மகன் பாலாஜி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலருக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *