மத்திய அரசின் தவறான கொள்கையால் நூல் விலை உயர்ந்துள்ளதாக தேர்தல் பணிக்குழு செயலாளரான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கருவம்பாளையம் பகுதி அவைத்தலைவர் தலைமை தாங்கியதோடு 55-ஆவது வட்ட செயலாளர் வரவேற்றுள்ளார். மேலும் மேயர், பொறுப்பாளர், 3-வது மண்டல தலைவர், செயலாளர் ஆகியோர் வாழ்த்தி பேசியுள்ளனர். இதில் தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ, தலைமை கழக பேச்சாளர், திருப்பூர் மத்திய மாவட்ட செயலாளர், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர்.
இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஊராக உள்ள திருப்பூரில் ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசின் தவறான கொள்கையால் தான் நூல் விலை உயர்ந்துள்ளதாகவும், பனியன் தொழில் அழிவு நிலைக்கு சென்றுள்ளதாக தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.