சறுக்கு அலை போட்டி…. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!

மாவட்ட அளவிலான அலை சறுக்கு போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டில் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கடற்கரையில் வைத்து நடைபெற்ற அலை சறுக்கு போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து 4 அடி முதல் 10 அடி நீளம் வரை உள்ள அலைச்சறுக்கு பலகையில் மாமல்லபுரம் மற்றும் கோவளம் அணிகளில் எந்த வீரர்கள் அதிக நேரம் கடலில் சீறிவரும் அலைகளில் தாக்குப்பிடித்து சறுக்கி விளையாடுகிறார்கலோ அந்த அணிக்கே பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

எனவே கடற்கரையில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள அலைச்சறுக்கு வீரர்கள் கடுமையான பயிற்சி எடுத்து சரக்கு பலகையுடன் வந்திருந்தனர். இதனையடுத்து சீறி வரும் அலைகளை கணித்து சுமார் 100 முதல் 200 மீட்டர் தூரம் வரை அலையில் சிக்கி கீழே விழாமல் சறுக்கி அசத்தினார்கள். இந்தப் போட்டியை பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கண்டுகளித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *