2022-ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டி…. மகளிர் டி 20 கிரிக்கெட் இணைப்பு..!!

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் டி 20  கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறவுள்ளது. இதில் மகளிர் டி-20 ஓவர் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில்  மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளது.

Image

அந்த வகையில், சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகளும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில்  நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *