”அந்த எண்ணம் வரணும்” அப்ப தான் கல்யாணம்- டாப்ஸி முடிவு….!!

எனக்கு எப்போது குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள ஆசை வருகின்றதோ, அப்போது தான்  திருமணம் செய்துகொள்வேன் என்று நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார் .

நடிகை டாப்ஸி கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழ் வந்த பட வாய்ப்புகளை கட்சிதமாக பயன்படுத்திக் கொண்ட டாப்ஸிக்கு தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மாறுபட்ட கதையை கொண்டு எடுக்கப்பட்டு வெளியான ”game over” என்ற படத்தின் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி டாப்ஸி பலரின் பாராட்டை பெற்றார்.

 

இந்நிலையில் செய்தியாளர்கள் பேட்டியின் போது நடிகை டாப்ஸி_யிடம் திருமணம் குறித்தும் ,  வருங்கால கணவரைப் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர் ,  எனது கணவர் நடிகரும் இல்லை, கிரிக்கெட் வீரரும் இல்லை, எனக்கு எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் ஆசை வருகிறதோ. அப்போது தான் நான் திருமணம் செய்துகொள்வேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.