ரகுல் ப்ரீத் சிங் நடித்த சில படங்கள் வெற்றி பெறாத காரணத்தால் அவருக்கு கடந்த ஆண்டு பட வாய்ப்புகள் எதுவும் வராமல் இருந்தது. தனது சம்பளத்தை ரகுல் ப்ரீத் உயர்த்தியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பற்றி அவர் கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறும்போது, ’சிலர் என்னைப்பற்றி பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர். அதுபோன்ற வதந்திகளை கண்டு பயப்படமாட்டான். என்னை எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்துகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உயரத்திற்கு செல்வேன். என்னை தாக்க வேண்டும் என்றால் நேரடியாக வாருங்கள் பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார். இந்த ஆண்டில் 2 தமிழ் படம் மற்றும் 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.