வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா..? வீட்டில் இருந்து கொண்டு ஈஸியா வாங்கலாம்… வாங்க பாப்போம்..!!

புதிய வண்ண வாக்காளர் அட்டையை வீட்டிலிருந்தே எளிதாக எப்படி பெறலாம் என்பதை பார்ப்போம்.

இந்தியா முழுவதும் குடிமக்களுக்கான அடையாள அட்டை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 18 வயது பூர்த்தியான அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாக்காளர் அட்டை சாதாரண படிவங்கள் வழங்கப்பட்டு பின்னர் சற்று மாறுபட்டு அட்டைகளில் வழங்கப்பட்டது.. தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை வழங்கப்படுகிறது அது எப்படி பெறுவது? அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? என்பதை இதில் பார்ப்போம். தற்போது தொழில்நுட்பங்கள் வளர்ச்சி காரணமாக மிகவும் எளிதாகவும், வேகமாகவும் வாக்காளர் அட்டையை பெற முடியும்.

அதாவது பெயர், முகவரி போன்ற திருத்தங்களை ஆன்லைனிலேயே மாற்றிக் கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையம் தற்போது புதிய அமைப்புடன் வெளியிடும் வாக்காளர் அட்டையை பெற விரும்பும் பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்போர் ரூபாய் 30 செலுத்தி NSVP என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மீண்டும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் NSVP வலைதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க படும் பட்டனை கிளிக் செய்து அனைத்து விவரங்களை நிரப்பவேண்டும். படிவங்கள் அனைத்தையும் விண்ணப்பித்து அப்ளை செய்த பிறகு 40 முதல் 60 நாட்களுக்குள் வண்ண வாக்காளர் அட்டையை பெறலாம். இதற்கு வயது சான்றிதழ், தற்போதைய புகைப்படம், முகவரி ஆதாரம் உள்ளிட்டவை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.