செயின் பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் ..!!! பொதுமக்கள் தர்ம அடி …!!!

பணத்  தேவைக்காக  செயின்  திருட முயன்ற  கல்லூரி  மாணவர்களை  மடக்கி பிடித்த  பொதுமக்கள்  தர்ம  அடி  கொடுத்து  காவல்துறைனரிடம்   ஒப்படைத்தனர் .

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை  அடுத்த   ரமணா நகரில்   தெய்வானை என்கிற  பெண் சாலையின்  ஓரமாக  நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு  கல்லூரி மாணவர்கள்  தெய்வானை கழுத்தில் இருந்த 5 சவரன்  தங்க தாலி செயினை பறிக்க  முயற்சி செய்தனர் .இதனை  கண்ட  அக்கம் பக்கத்தினர்   இருவரையும்  மடக்கி பிடித்து கைகளை  கயிற்றால்   கட்டி   தர்ம அடி  கொடுத்தனர்.

Image result for CHAIN SNATCHING

 

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு விரைந்து  வந்த  மீஞ்சூர் காவல்துறையினர்   இருவரையும்  கைது  செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கைது  செய்யபட்ட   மணிகண்டன்,பிரசாந்த்  ஆகிய  இருவரும் தண்டையார்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்   என்பதும், செலவுக்காக தொடர்ந்து செயின்  பறிப்பில்  ஈடுபட்டு  வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது .