கல்லூரி மாணவர்களுக்கு – புதிய அறிவிப்பு….!!

பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக நடப்பு ஆண்டு தேர்வு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்றும், தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.