வீடு புகுந்து நகை பறிப்பு…. கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இம்மிடிப்பாளையம் சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வித்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

கடந்த 10- ஆம் தேதி வித்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது ஒரு வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து வித்யாவின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வித்யாவை மிரட்டி தங்க சங்கிலியை பறித்த தூத்துக்குடியை சேர்ந்த பேரின்பநாதன்(19) அவரது நண்பர் லியோஜோப்ரின்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இருவரும் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இருவரும் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply