என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள என் கண்டிகை கிராமத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இவர் பொன்னேரி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சர்மிளா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சர்மிளா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.