11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர்.

college students tamilnadu க்கான பட முடிவு

இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்கள், மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு, கல்லூரிக் கல்வி இயக்குநர் சாருமதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.