இதை சீக்கிரம் முடிங்க… எல்லாம் சரியா இருக்குதா… கலெக்டரின் திடீர் ஆய்வு…!!

கொரோனா சிகிச்சை கண்காணிப்பு மையத்தில் திடிரென கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டுயுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 14 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பல முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் 1, 050 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகள்  இருக்கின்றது. அதில் வென்டிலேட்டர் வசதி கொண்ட 25 படுக்கைகள் மற்றும் 225 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ளது. இதனை தொடர்ந்து சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 ஆக்சிசன் படுக்கைகள் உள்ளிட்ட மொத்தமாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கொரோனா  சிகிச்சை கண்காணிப்பு மையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 300 ஆக்சிசன் வசதிகொண்ட படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 860 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை கலெக்டர் கிரண்குராலா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கொரோனோ சிகிச்சை மையத்தில் குடிநீர். மின் விசிறி. கழிப்பறை மற்றும் படுக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்துள்ளார். அதன் பின் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *