வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்….!!!!

மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா  சிங் கபிலர்மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை நேற்று நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது சோழசிராமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  அவர் சென்றுள்ளார். அப்போது மாணவ, மாணவிகள் கற்றல் திறன் பற்றிய ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து பதிவேடுகளை பார்வையிட்டுள்ளார்.

மேலும் குழந்தைகளின் வருகை, ஊட்டச்சத்து நிலை குழந்தைகளுக்கு அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து சோழசிராமணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11,29,000 மதிப்பீட்டில் நீர்வரத்து கால்வாய் ஆழப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்துள்ளார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply