தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெயா…? போலீசாரின் தீவிர சோதனை…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் மனு அளித்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒருவர் தண்ணீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்றார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் நேற்று மனு அளிக்க வந்த பொதுமக்களை சோதனை செய்தனர். இதனையடுத்து அவர்கள் கொண்டு வந்த தண்ணீரை குடித்து காண்பித்து விட்டு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி பொதுமக்கள் தங்கள் கொண்டு சென்ற பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.

Leave a Reply