இதை கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்… திடீரென வந்து நின்ற கலெக்டர்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கும் பொதுமக்களுக்கும் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அபராதம் விதித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் அதை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழ கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் என குறிப்பிட்ட கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பிட்ட கடைகளில் கொரோனோ கட்டுப்பாடு நடவடிக்கைகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கூட்டமாக கூடி நிற்கின்றனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் முறையாக கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனரா? என அதிகாரிகள் திடிரென ஆய்வு மேற்கொண்டுயுள்ளனர். அப்போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் நின்ற பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் சங்கராபுரம் பகுதி சாலையோரங்களில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் டீக்கடையில் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக இருந்ததை கண்ட சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் அந்த கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களை எச்சரித்து அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *