கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் – வியாபாரிகள் திடீர் முடிவு …!!

கோயம்பேடு மார்க்கெட் நாளை செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்  ஒட்டுமொத்த பகுதியும் முடங்கியுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும், அதற்கு எந்த தடையும் அல்ல என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டள்ளது.

கொரோனா தாக்கம் எதிரொலியாக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். அப்படி கடைபிடிக்கவில்லை என்றால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசு எச்சரித்துள்ளது. இந்த வகையில் மக்கள் கூடுவதால் கூடுவதை தவிர்த்தால் கொரோனா பரவலை முற்றிலும் தவிர்த்து விடலாம் என்பதை கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு கோயம்பேடு மார்க்கெட் அடைக்க முடிவெடுதிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் குறைவாக வருவதன் காரணமாக நாளை வழக்கம்போல கோயம்பேடு மார்க்கெட் இயங்கும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மக்கள் நலன் கருதி அத்தியாவசிய பொருட்கள் வழங்க இந்த முடிவு எடுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *