“இது எங்களின் சந்தோஷத்திற்காக நடத்தப்படுகிறது” புதுவிதமான போட்டி…. ஆர்வமுடன் பங்கேற்கும் வாலிபர்கள்….!!!

பொங்கல் விழாவை முன்னிட்டு தேங்காய் உடைக்கும் போட்டி நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி அருகே கொன்றைக்காடு என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு தேங்காய் உருட்டும் போது தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது எதிர்த்திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காயை வைத்து நேருக்கு நேர் மோத விடுவர். அப்போது தேங்காய் மூடி உடைத்தவர் வெற்றியாளராக ஏற்றுக்கொள்ள படுவார். இதில் போரிக்காய் என்னும் பெயர் கொண்ட தேங்காய் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மோதல் தேங்காய் ரூபாய் 200 முதல் 500 விலைகொடுத்து வாங்கி போட்டிக்காக பயன்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து அந்த கிராமத்தின் இளைஞர்கள் கூறியதாவது, இந்த போட்டி எங்களது சந்தோஷத்திற்காக பொங்கல் தினத்தை ஒட்டி நடத்தப்படுகின்றது. இதனால் யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது என்றும் கூறினர். மேலும் இந்த விளையாட்டிற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பல்வேறு கிராமங்களில் அலைந்து திரிந்து தேங்காய்களை சேகரித்தோம் என்றும் கூறினர். அதோடு கஜா புயலில் தென்னை மரங்கள் விழுந்து விட்டதால் இவ்வகையான தேங்காய் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *