திமுக + காங்கிரஸ் கொள்ளையின் அடிப்படையில் கூட்டணி… தமிழிசை விமர்சனம்…!!

கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் .

Image result for தமிழிசை

இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசையை சௌந்தர்ராஜன் தெரிவிக்கையில் ,  இவர்கள் அனைவரும் போலி பகுத்தறிவுவாதிகள் . இலங்கை மக்களை கொள்ள உதவி செய்தது காங்கிரஸ் என்று ராஜபக்சே சொல்லி இருக்கிறார் . காங்கிரஸ் கட்சியின் அந்தக் கொள்கையில் தி.மு.க_விற்கு உடன்பாடா ..? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை இது கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி இல்லை . கொள்ளையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி . மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று அழைப்பார்கள் மதத்தின் பெயரை கொண்ட ஒரு கட்சியை  உள்ளே வைத்துக் கொண்டு எப்படி மதச்சார்பற்ற கூட்டணி என்று சொல்வார்கள் என்று விமர்சனம் செய்தார்.