“வேலூர் மக்களவை தேர்தல்” முதல்வர் பழனிசாமி 27-ஆம் தேதி முதல் பிரச்சாரம்..!!

வேலூர் மக்களவை தேர்தலுக்காக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27-ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார். 

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி  நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி  சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் தீபலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் 15ஆம் தேதி திமுக பிரமுகர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.

Image result for முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்

 

இந்நிலையில் அதிமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 27, 28 மற்றும் 02 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

 

27 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாணியம்பாடி பகுதிகளிலும், மாலை 6 மணிக்கு ஆம்பூர் பகுதிகளிலும், 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு  கீழ் வைத்தியணான்  குப்பம் பகுதியிலும், மாலை 6 மணிக்கு குடியாத்தம் பகுதியிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அணைக்கட்டு பகுதியிலும் மாலை 6 மணிக்கு வேலூர் பகுதியிலும் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார். தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி பரப்புரை தொடங்கவுள்ள அதே 27-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினும் கதிர் ஆனந்தை ஆதரித்து  பரப்புரை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது