முதல்வர் – துணை முதல்வர் சந்திப்பு… !!

பசுமை வழிசாலையில் இருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்.

இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சென்று 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அங்கே இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும் ,  தொழில் துவங்க முன் வரவேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து வலியுறுத்தி வந்தார்.இந்த பேச்சுவார்த்தையில்  பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. முதல்வர் 13 நாட்கள்   சுற்றுப் பயணங்களை முடித்துவிட்டு இன்று அதிகாலையில் தான் சென்னைக்கு வந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து அவரது இல்லம் வரை உற்சாக வரவேற்பு கட்சியினர் கொடுத்திருந்தனர்.

இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் செல்லாத துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். தற்போது கிரீன்வேஸ் சாலையில் இருக்கக்கூடிய முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் இந்த சந்திப்பின் போது அதிமுக நிர்வாகிகளான முனிசாமி , மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருக்கின்றனர். அவர்கள்  பூங்கொத்து கொடுத்து முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  முன்னதாக அமைச்சர்கள் அன்பழகன் , செல்லூர் ராஜு  சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதனை முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.