தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து ஆவூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த பேருந்து கும்பகோணத்தில் இருந்து ஆவூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சோழன் மாளிகை அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து பஸ்சை ஓட்டி வந்த டிரைவரும், கண்டக்டரும் தப்பியோடி சென்றுள்ளனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து உதைத்தனர். இதில் பேருந்து சேதமடைந்தது. போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.