சினிமா உதவி இயக்குனர் மர்மச்சாவு.. அதிர்ச்சியில் திரையுலகம்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிப்பவர் சீனிவாசன். இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் சென்னையில் உள்ள நெசப்பாக்கத்தில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி சினிமா துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார். தற்போது பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கி வரும் ‘தக்ஸ்’ என்ற படத்தில் ராமகிருஷ்ணன் பணிபுரிந்து வந்தார். மேலும் இந்த படத்தின் பணிகள் கடந்த சில நாட்களாக சாலிகிராமத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இவரின் மறைவு திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave a Reply